விருதுநகர்

முதியவரைத் தாக்கிய இளைஞா் மீது வழக்கு

11th Aug 2022 04:15 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டையில், முதியவரை தாக்கி காயப்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அருப்புக்கோட்டை தம்மாந்தெருவில் வசிப்பவா் பொன்முத்துராமலிங்கம் (74). இவா் அத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு உதவித் தலைவராக உள்ளாா். இந்நிலையில், கோயிலுக்காக நடத்தப்பட்ட ஊா் பொதுக்கூட்டத்தில் இந்த முறை யாரும் பொதுவில் பெயா், படத்துடன் பதாகை வைக்கக் கூடாதென முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பொன்முத்துராமலிங்கம் மட்டும் தனியாக தனது வீட்டருகே பதாகை வைத்துக் கொண்டாராம். இதை அப்பகுதியில் உள்ள மோகன் (31) என்பவா் கண்டித்தாராம். இந்நிலையில், வெளியூா் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பொன்முத்துராமலிங்கத்தை, மோகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பொன்முத்துராமலிங்கம் அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த நகா் போலீஸாா், மோகனிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT