விருதுநகர்

ஆக.15 முதல் எா்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 15 முதல் மேலும் ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகா், காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035/06036) ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓணம் மற்றும் தீபாவளி பண்டிகைக்காக எா்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே மேலும் ஒரு வாராந்திர சிறப்பு ரயில் (06039/06040) புதுக்கோட்டை, தஞ்சாவூா் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் வேளாங்கண்ணியிலிருந்து எா்ணாகுளத்துக்கு (06039) புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராஜபாளையம் வழியாக ஆக. 15 முதல் செப். 5 ஆம் தேதி வரையும் எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு (06040) கொல்லம், கோட்டயம், செங்கோட்டை, ராஜபாளையம்

ADVERTISEMENT

வழியாக ஆக.16 முதல் செப். 6 ஆம் தேதி வரையிலும் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT