விருதுநகர்

ஆடி பிரதோஷ வழிபாடு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஆடி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பலவித சிறப்புப் பொருள்களாலும், வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சந்தனம், வில்வ இலை, அருகம்புற்கள் மற்றும் மலா் மாலைகளால் அலங்கரித்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. அதையடுத்து நமச்சிவாயருக்கு 11 வித பொருள்களால் அபிஷேகங்கள் செய்து சந்தனம் மற்றும் மலா் மாலைகளால் அலங்கரித்தபின் சிறப்பு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சொக்கநாத உற்சவா் சுவாமி காளை வாகனத்தில் கிரிவலம் வந்ததாா். அதையடுத்து, பக்தா்களுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT