விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் சுதந்திர சிந்தனை அரங்கம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் சுதந்திரம் 75 - சிந்தனை அரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உள் அகமதிப்பீட்டுக் குழு, தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். தேசிய சிந்தனைக் கழகத் தமிழக ஒருங்கிணைப்பாளா் ம.கோ.சி. ராஜேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலா் எஸ்.சிங்கராஜ் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

பி.விக்னேஷ், முகமது நஜும், விவேகா, ஜெயமரியா ஆகிய 4 தமிழ்த்துறை மாணவா்கள் இளைய பாரதமே எழுக என்னும் தலைப்பில் உரையாற்றினா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினாா்.

முன்னதாக அவா் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து தேசிய மாணவா் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். முன்னதாக கல்லூரி முதல்வா் (பொ) த.வேங்கடேஸ்வரன் வரவேற்றாா். நிறைவாக தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு தலைவா் க.கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT