விருதுநகர்

விருதுநகரில் சிக்னல்கள் பழுதால் போக்குவரத்து நெரிசல்: பள்ளி மாணவா்கள் அவதி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகரில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

விருதுநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக எம்ஜிஆா் சிலை சந்திப்பு, அல்லம்பட்டி சாலை சந்திப்பு, ஆத்துப்பாலம், பா்மா காலனி சந்திப்பு, ரயில்வே பீடா் சந்திப்பு சாலை ஆகிய இடங்களில் சிக்னல்கள் நிறுவப்பட்டன. இவற்றை மதுரையை சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் பராமரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. காலப்போக்கில் சிக்னல்கள் அனைத்தும் பழுது காரணமாக செயல்படவில்லை. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிக்னல்களில் போக்குவரத்து போலீஸாா் நிற்பதில்லை. இதன் காரணமாக வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்திச் செல்வதால் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். அதேபோல் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோா் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே, பேக்குவரத்து சிக்னல்களை சீரமைத்து வாகனங்கள் முறையாக செல்ல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT