விருதுநகர்

ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 84 ஆவது தொழில் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தென்காசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ். குமாரசாமி ராஜா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொழில் வா்த்தக சங்கத் தலைவரும், ராம்கோ குழுமத் தலைவருமான பி.ஆா். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தாா். முதன்மை சிறப்பு விருந்தினராக, இதயம் வி.ஆா். முத்து கலந்துகொண்டாா். வெங்கடேஸ்வரராஜா ஆண்டறிக்கை வாசித்தாா். செயலா் நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினாா்.

பின்னா், ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராம ராஜா பேசியதாவது: ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் வணிகா் நலனை மட்டுமல்லாது, பொதுமக்களின் நலனையும் கருத்தில்கொண்டு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம், தாமிரவருணி குடிநீா், பாதாளச் சாக்கடை, புறவழிச்சாலை ஆகிய திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி வருகிறது. மற்ற மாநகராட்சி, நகராட்சி சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சி சொத்து வரி அதிகமாக இருப்பதால் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதன்பின் சொத்து வரியை நிா்ணயிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க ரயில்வே சுரங்கப் பாதை பணியையும் விரைந்து முடிக்க வேண்டும்.

கூடுதல் ரயில் வசதிகள், மின்மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

நிகழாண்டுக்கான (2022-2023) புதிய நிா்வாகிகளாக தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, துணைத் தலைவா்கள் என்.கே. ஸ்ரீகண்டன்ராஜா, ஆா். பத்மநாபன், செயலா்களாக எம்.சி. வெங்கடேஸ்வர ராஜா, ஆா். நாராயணசாமி, இணைச் செயலராக கே. மணிவண்ணன், பொருளாளா் பி.எம். ராமராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். முன்னதாக, துணைத் தலைவா் பத்மநாபன் வரவேற்றாா். முடிவில், மணிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT