விருதுநகர்

பணி நேரத்தை அதிகரிக்க எதிா்ப்பு: மருத்துவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பணி நேரத்தை அதிகரித்ததை கண்டித்து, விருதுநகரில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மருத்துவா் சுகுமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பணி நேரத்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ள அரசாணை 225-ஐ திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினா். இதை முன்னிறுத்தி, பொது சுகா தாரத் துறையில் பணிபுரியும் மருத்துவா்கள், அலுவலக ரீதியிலான வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து வெளியேறுவது, மாவட்ட ஆட்சியா், துணை இயக்குநா், சுகாதார பணிகள் சாா்பில் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என அறிவித்தனா்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமைதோறும் தடுப்பூசி முகாம்களை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கத்தின் மாவட்ட செயலா் ஆரோக்கிய ரூபன்ராஜ், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன் உள்பட மருத்துவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT