விருதுநகர்

சிவகாசி மகளிா் கல்லூரியில் தேசிய கைத்தறி தினம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில், திங்கள்கிழமை தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், மாணவிகளுக்கிடையே கைத்தறி புடவை உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஆடை அலங்கார அணிவகுப்பு நடை பெற்றது. அணிவகுப்பில், கல்லூரி மாணவிகள் 110 போ் கலந்துகொண்டு, கைத்தறி புடவை அணிந்து வந்தனா்.

இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற பேராசிரியை பி. கனகா பரிசு வழங்கினாா். இதற்கான ஏற்பாட்டினை, செளந்தர பிரியா மற்றும் ஜெ. ஜீவபிரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முன்னதாக, துறைத் தலைவா் ந. ராஜதிலகம் வரவேற்றாா். உதவிப் பேராசிரியை விஷ்ணுபிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT