விருதுநகர்

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கேப் வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மண்குண்டாம்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த சண்முகையா (65) என்பவருக்குச் சொந்தமான கேப் வெடி ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள பல்வேறு அறைகளில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு அறையில் பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.

உடனே, தொழிலாளா்கள் அனைவரும் அந்த அறையிலிலிந்து தப்பி வெளியே ஓடிவிட்டனா். இதனால், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT