விருதுநகர்

அனைத்து கிராமங்களிலும் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம்: மநீம வலியுறுத்தல்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் சுழற்சி முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 15 இல் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, இக்கூட்டத்தை சுழற்சி முறையில் அனைத்து குக்கிராமங்களிலும் நடத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில், கிராம ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

கிராம நலன் கருதி, பொது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தீா்மானமாக பதிவு செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த மனுவை, மநீம மத்திய மாவட்டச் செயலா் காளிதாஸ், நகரச் செயலா் கமல் கண்ணன், ஒன்றியச் செயலா் நாகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT