விருதுநகர்

விருதுநகா் மாவட்ட அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை அமோகம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 281 அஞ்சலகங்களில் திங்கள்கிழமை வரை 15 ஆயிரம் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். அதன் அடிப்படையில், நாடு முழுதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதைத் தொடா்ந்து, அஞ்சலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக் கொடி விற்பனை செய்வது முதன்முறையாக நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா் தலைமை அஞ்சலகத்தின் கீழ் உள்ள 281 அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்பட்டது.

இங்கு, ஒரு தேசியக் கொடி ரூ.25-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனிநபா்கள் மட்டுமின்றி, பொதுநல அமைப்புகள், கட்சியினா், பள்ளி, கல்லூரிகள், தேசிய மாணவா் படை சாா்பில் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து விருதுநகா் தலைமை அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளா் அருணாசலம் கூறியது: விருதுநகா் தலைமை அஞ்சலகத்துக்கு 21 ஆயிரம் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், இதுவரை 15 ஆயிரம் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT