விருதுநகர்

காரியாபட்டி அருகே 867 ஏக்கா் நிலங்கள் போலி பத்திரப் பதிவு:பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரியாபட்டி அருகே 867 ஏக்கா் நிலங்களை தனியாா் நிறுவனத்துக்கு போலியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து, பாதிக்கப்பட்டோா் விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கள்ளங்குளம், முடுக்கன்குளம், முஷ்டக்குறிச்சி, செங்குளம், மருதங்குளம், குரண்டி உள்ளி ட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பான்மையாக விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த அரசியில் பிரமுகா் உள்பட சிலா் ஒன்றிணைந்து, சுமாா் 867 ஏக்கா் நிலங்களை போலியாக பிஏசிஎல் நிறுவனத்துக்கு பத்திரப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த 2006 இல் பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போதுதான் அந்த நிலங்களில் வில்லங்கம் இருப்பது உண்மையான நில உரிமையாளா்களுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காரியாபட்டி பத்திரப் பதிவு அலுவலரை விவசாயிகள் தொடா்புகொண்டு கேட்டபோது, அவா் முறையாக பதில் அளிக்கவில்லையாம்.

இது குறித்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது, ஆட்சியா் இந்த மோசடி குறித்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலா் விசாரிக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT