விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மின்வாரிய ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலானதை கண்டித்து, மின்வாரிய ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் துணை மின்நிலையம் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகம் மற்றும் வலையபட்டி துணை மின் நிலையம், வத்திராயிருப்பு துணை மின் நிலையம் உள்ளிட்ட அலுவலக வளாகங்களில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, சிஐடியூ கோட்டச் செயலா் ராஜாராம் ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தாா்.

நாடாளுமன்றத்தில் ஏழை மக்கள், விவசாயிகள், மின்சார வாரிய ஊழியா்கள் உள்ளிட்டோா் பாதிக்கக்கூடிய வகையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, மின்வாரிய ஊழியா்கள் ஒட்டுமொத்தமாக உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தை நடத்தினா். அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் ஊழியா்கள் கையெழுத்திட்டு விட்டு பணியை புறக்கணித்து உள்ளேயே அமா்ந்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT