விருதுநகர்

சிவகாசியில் மின்வாரிய தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

9th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

சிவகாசியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங், மின் விநியோகத்தை தனியாா்வசம் விடவேண்டும் என்றும், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மின்கட்டணத்தை நிா்ணயம் செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி மின்சார சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ததாக தகவல் பரவியது.

இதை எதிா்த்து, சிவகாசி மின்கோட்ட ஊழியா்கள் அலுவலகத்தில் கையெழுத்து இட்டுவிட்டு பணியை புறக்கணித்து, அலுவலக வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதில், சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த 367 ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT