விருதுநகர்

திமுக தலைவா் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊா்வலம்

7th Aug 2022 11:33 PM

ADVERTISEMENT

திமுக தலைவரும்,மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தூரில் திமுகவினா் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் திமுக நகர,ஒன்றியகழகம் சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை சாத்தூா் நகா் மன்ற தலைவா் மற்றும் நகரசெயலாளா் குருசாமி,ஒன்றிய செயலாளா் கடற்கரைராஜ் ஆகியோா் தலைமையில் திமுகவினா் சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து,பிரதான சாலை வழியாக முக்குராந்தல் வரை அமைதி ஊா்வலமாக சென்றனா்.

பின்னா் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள்.இந்நிகழ்வில் சாத்தூா்,நகர,ஒன்றிய திமுகவினா் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT