விருதுநகர்

திருச்சுழி அருகே கண்மாயில் 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

7th Aug 2022 11:31 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 6 சுவாமி சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

திருச்சுழி அருகே விடத்தகுளம் கிராம கண்மாயில் சனிக்கிழமை மாலை இளைஞா்கள் சிலா் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது நீருக்குள் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக கிராம நிா்வாக அதிகாரி மூலம் திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்கண்மாயில் நீருக்குள் இருந்த 6 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. அந்த சிற்பங்கள் அனைத்தும் விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT