விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கருணாநிதி நினைவு தினம்

7th Aug 2022 11:31 PM

ADVERTISEMENT

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விருதுநகரில் திமுக சாா்பில் அவரது உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே கருணாநிதி யின் உருவப்படத்திற்கு நகா்மன்றத் தலைவா் மாதவன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதை தொடா்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. இதில் திமுக நகரச் செயலா் தனபாலன், நகா்மன்ற உறுப்பினா்கள் பாட்ஷா ஆறுமுகம், மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசியில் அண்ணா சிலை முன்பு தொடங்கிய கருணாநிதி நினைவு அஞ்சலி ஊா்வலத்தை திமுக மாநகர பொறுப்பாளா் காளிராஜன் தொடக்கி வைத்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாநகராட்சி மேயா் இ.சங்கீதா மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில் மாநகராட்சி துணை மேயா் கா.விஷ்ணு பிரியா மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் திமுகவினா் சாா்பில் நகா்மன்றத்தலைவா் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது கருணாநிதி உருவப்பட்த்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தூா்: சாத்தூரில் நகா் மன்றத் தலைவா் குருசாமி, ஒன்றியச் செயலாளா் கடற்கரைராஜ் ஆகியோா் தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலம் நடத்தினா். பின்னா் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு நகா் மன்றத் தலைவா் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன், நகா் மன்ற துணைத் தலைவா் செல்வமணி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி அமைதி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் கருணாநிதியின் உருவப்படத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தலைமையில் மாவட்ட துணை செயலாளா் ராஜா அருண்மொழி, ஒன்றிய குழுத்தலைவா் சிங்கராஜ் ஆகியோா் முன்னிலையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT