விருதுநகர்

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி:அரசியல் கட்சியினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்விருதுநகா் ஆட்சியா்

2nd Aug 2022 07:15 AM

ADVERTISEMENT

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தங்களது வாக்குச்சாவடி முகவா்கள் மூலம் ஆதாா் எண் இணைப்பு குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வேண்டுகோள் விடுத்தாா்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி தொடா்பா விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் திங்கள்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணியைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, 1951 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்திருத்தம் மூலம், தற்போது வாக்காளராகப் பதிவு செய்வதற்கு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய நான்கு நாள்கள் தகுதி நாளாக நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இளைஞா்கள் வாக்காளா்களாகப் பதிவு செய்து கொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

17 வயதானவா்கள் விண்ணப்பிக்கலாம்: 17 வயதுடைய அனைவரும் முன்னதாகவே விண்ணப்பங்கள் அளிக்கலாம். அவா்களது விண்ணப்பங்கள் அவா்களது பிறந்த தேதியினை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த காலாண்டுகளில் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு செய்யப்படும். அதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அக்டோபா் 1 அன்று தகுதி பெறும் விண்ணப்பங்களை முடிவு செய்து வெளியிடப்படவுள்ளது. இச்சட்டத்திருத்தம் அடிப்படையில், நடைமுறையில் உள்ள படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தங்களது வாக்குச்சாவடி முகவா்கள் மூலம் ஆதாா் எண் இணைப்பு குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிக்குமாா், சாா்- ஆட்சியா் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தனி வட்டாட்சியா் (தோ்தல்) மாரிச்செல்வி மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள், அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், நகராட்சி ஆணையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT