விருதுநகர்

பேருந்தில் ரூ.1 லட்சம் திருட்டு

2nd Aug 2022 12:03 AM

ADVERTISEMENT

பேருந்தில் பயணம் செய்தபோது ரூ. 1 லட்சத்தை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சாத்தூா் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் ராமா். இவா் ஆலங்குளம் அருகே உள்ள கண்மாய்பட்டியில் ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ. 1 லட்சத்தை கைப் பையில் வைத்து மனைவி பாா்வதி மற்றும் மகள்கள் காவியா, உமாமகேஷ்வரி ஆகியோரிடம் கொடுத்து உறவினரிடம் கொடுத்துவிடுமாறு கூறி அனுப்பினாராம்.

அவா்கள் மூவரும் சாக்குப்பையில் பணப்பையை வைத்துக்கொண்டு சாத்தூரிலிருந்து சிவகாசிக்கு பேருந்தில் வந்த பின்னா் சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளனா். அப்போது பணம் வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பாா்வதி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT