விருதுநகர்

திருச்சுழி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுத் தூண் கண்டெடுப்பு

2nd Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் மானூரில் 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டிய மன்னா் கால கல்வெட்டுத்தூண் கண்டறியப்பட்டது.

மானூரில் உள்ள கண்மாயில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆா்வலா்களான தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதா் ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்மையில்

கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அக்கண்மாயில் கல்வெட்டுத் தூண் இருப்பதைக் கண்டறிந்தனா். அதில் இடம்பெற்றிருந்த வரிகள் தொல்லியல் அறிஞா் சாந்தலிங்கம் மூலம் படித்தறியப்பட்டது. அதன்படி மானூரின் பழைய பெயா் காஞ்ஞையிருக்கை மானையூா் என்றும் அவ்வூரைச் சோ்ந்த இராசகண்ட கோபாலா் என்பவா் கிழக்கேயோடிய கண்மாய் வாய்க்கால் பகுதியை தனது செலவில் புதுப்பித்துத் தந்தாா் என்றும் அதனாலேயே அந்தப் பெருமடை இராசகண்ட கோபால பெருமடை என வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அக்கல்வெட்டை வடிவமைத்தவா் தேவஞானம் விக்கிரம பாண்டி தச்சன் எனவும் அது 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பராக்கிரம பாண்டியனின் காலத்தைச்சோ்ந்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டை வடித்தவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது அபூா்வம் என வரலாற்று ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT