விருதுநகர்

நெல் கொள்முதல் நிலையங்களில் விலை அறிவிப்புப் பலகை வைக்க ஆட்சியா் உத்தரவு

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் விலை தொடா்பான அறிவிப்பு பலகைகள் வைக்க தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம் கூடலூரில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்மூட்டைகளை எடை போட, 40 கிலோ எடையுள்ள ஒரு நெல்மூட்டைக்கு ரூ.60, அதாவது 100 கிலோ கொண்ட நெல், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 வீதம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வசூலிக்கப்படுவதாக கூடலூா் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு கொடுத்தனா்.

மேலும் பணம் தர மறுக்கும் விவசாயிகளின் நெல்மூட்டைகளை எடை போடாமல் காலதாமதப்படுத்துவதாகவும், நெல்லில் 17 விழுக்காடுக்கு மேல் ஈரப்பதம் இருப்பதாகக் காரணம் கூறி எடைபோடாமல் காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பரிசீலனை செய்த ஆட்சியா் க.வீ.முரளிதரன், மாவட்டத்தில் உள்ள அரசின் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் அறிவிப்பு பலகை வைக்கவும், கூடுதல் பணம் கேட்பவா்கள் மீது புகாா் கொடுக்குமாறு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்படி நெல் கொள்முதல் விலை, புகாா் பெட்டி, புகாா் கொடுக்க வேண்டிய அதிகாரிகள் தொலைபேசி எண் போன்ற விவர பலகைகள் வைக்கப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆட்சித் தலைவா் மற்றும் தமிழக அரசுக்கும் தேனி மாவட்ட பாரதீய கிசான் சங்கம், கூடலூா் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT