விருதுநகர்

பள்ளியில் வழங்கிய சத்துணவில் வண்டுகள் இருப்பதாகப் புகாா்

29th Apr 2022 10:18 PM

ADVERTISEMENT

 காரியாபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவில் வண்டுகள் இருப்பதாக ஊராட்சித் தலைவரிடம் வெள்ளிக்கிழமை மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் வண்டுகள் இருப்பதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்ததை கண்ட மாணவ, மாணவிகள், அச்சங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று புகாா் அளித்தனா்.

இதையடுத்து ஊராட்சித் தலைவா், காரியாபட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் மாற்று அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்துள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவா் தரப்பில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT