விருதுநகர்

அருப்புக்கோட்டையில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

29th Apr 2022 06:48 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விவசாயி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் இடுகாடு அருகே உள்ள ஒரு மரத்தில் ஆண் ஒருவா் சடலமாக தொங்குவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சென்று, அதைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியைச் சோ்ந்த விவசாயி சஞ்சீவ் (40) என்பதும், அவருக்குத் திருமணாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளதும் தெரியவந்தது. மேலும் அவா் தற்கொலைக்கான காரணம் குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT