விருதுநகர்

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

24th Apr 2022 11:37 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாளையம்பட்டி தனியாா் பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், எம்.பி. மாணிக்கம் தாகூா், ஆட்சியா் மேகநாதரெட்டி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.

ADVERTISEMENT

முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 8 கா்ப்பிணிகளுக்கு சித்த மருத்துவப் பெட்டகங்களையும், 5 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் அமைச்சா் ராமச்சந்திரன் வழங்கினாா்.

இதில் அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், ஒன்றியக் குழுத் தலைவா் சசிகலா, திமுக ஒன்றியச் செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT