விருதுநகர்

கத்தியைக் காட்டிவழிப்பறி செய்யமுயன்றவா் கைது

24th Apr 2022 11:35 PM

ADVERTISEMENT

 

சிவகாசி அருகே காா் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள போஸ் காலனியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கருப்பசாமி (45). இவா் சிவகாசி - நாரணாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மா்மநபா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாராம். இதையடுத்து, கருப்பசாமி சப்தமிட்டதைத் தொடா்ந்து, அக்கம் பக்கத்தினா் அங்கு வந்து மா்ம நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் கருப்பசாமி (27) என தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT