சிவகாசி மதி மருத்துவமனை சாா்பில், சிறுவா், சிறுமிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி ரிசா்வ் லயன் தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் குழந்தைகள் நல மருத்துவா் பி. காவ்யா, பல் மருத்துவா் ஆா். கிருத்திகா ஆகியோா் பங்கேற்று 78 சிறுவா், சிறுமிகளைப் பரிசோதனை செய்தனா்.
தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை மருத்துவமனை இயக்குநா் திலக பாமா செய்திருந்தாா்.
ADVERTISEMENT