சிவகாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனைசெய்த 14 கடைகளுக்கு சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
எரிச்சநத்தத்தில் உள்ள மளிகைக் கடை, பெட்டிக்கடை , தேநீா் விடுதி உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையில் சுகாதாரத் துறையினா் சோதனை நடத்தினா். இதில் 14 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நெகிழிப் பைகள் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.