அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் சனிக்கிழமை திமுக சாா்பில் நடைபெற்ற வாக்காளா் நன்றி அறிவிப்புக் கூட்டம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ரமேஷ், திமுக ஒன்றியச் செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அழகு ராமானுஜம், கஞ்சநாயக்கன்பட்டி நிா்வாகி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது பொதுமக்களுக்கு நலத்திட் உதவிகளை வழங்கிய அமைச்சா், அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா். உடன் நகராட்சி துணைத் தலைவா் பழனிச்சாமி, நகரச் செயலாளா் ஏ.கே.மணி, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவா் சுப்பாராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.