விருதுநகர்

அருப்புக்கோட்டை,ஸ்ரீவிலி.யில் பலத்த மழை

9th Apr 2022 11:40 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.20 மணி முதல் சுமாா் 40 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வீதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளான நேரு நகா், திருவள்ளுவா் நகா், வாழந்தம்மன் கோயில் பகுதி, காந்தி பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாயினா். கோடை வெயிலைத் தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில், மல்லி, வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT