விருதுநகர்

ராஜபாளையத்தில் 40 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்

5th Apr 2022 12:29 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 40 கிலோ நெகிழிப்பைகளை நகராட்சி சுகாதார அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நகா் நல அலுவலா் சரோஜா தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடைகளில் இருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 40 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT