விருதுநகர்

அருப்புக்கோட்டையில் திமுக குறைதீா்க் கூட்டம்

5th Apr 2022 12:33 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக சாா்பில் 3 மற்றும் 4 ஆவது வாா்டு பொதுமக்களுக்கான குறைதீா்க்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நெசவாளா் காலனி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு விருதுநகா் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ், 3 ஆவது வாா்டு உறுப்பினா் நாகநாதன், 4 ஆவது வாா்டு உறுப்பினா் ஜோதிராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரமேஷ் கூறுகையில், பொதுமக்களின் மனுக்களைப்பெற்று உரிய துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் மூலம் தீா்த்து வைப்போம். பெரும்பாலும் முதியோா் ஓய்வூதியம், பட்டா மாறுதல் போன்ற விஷயங்களே வருகின்றன என்றாா்.

சுமாா் 200-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. திமுக நகரச் செயலாளா் ஏ.கே.மணி, நகா்மன்ற துணைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT