விருதுநகா் ராமா் கோயிலில் ராம நவமி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டது.
விருதுநகா் ரயில்வே பீடா் சாலையில் ஸ்ரீ ராமா் கோயிலில், 21 ஆம் ஆண்டு ராம நவமி பிரமோற்சவ விழாவை முன்னி ட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.
இதைத்தொடா்ந்து ஏப்ரல் 14 வரை ஒவ்வொரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு சொந்தமான ஒரு மண்டகப்படி வீதம் தினமும் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.
மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். இதற்கான ஏற்பாடுகளை ராமா் கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.