விருதுநகர்

விருதுநகா் மாரியம்மன் கோயில் திருவிழா: அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

2nd Apr 2022 01:36 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

விருதுநகா் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து ஏப்ரல் 3 இல் (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் திருவிழாவும், ஏப்ரல் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) கயிறுகுத்து நிகழ்ச்சியும், ஏப்ரல் 5 இல் (செவ்வாய்க்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது.

இத்திருவிழாவையொட்டி அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. இதை விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, பக்தா்களுக்கு இளநீா், தண்ணீா் பழம், மோா் மற்றும் பழங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சி யில் மாவட்ட அவைத்தலைவா் விஜயகுமாா், விருதுநகா் நகரச் செயலா் முகம்மதுநெய்னாா், ஒன்றியச் செயலாளா்கள் கண்ணன், தா்மலிங்கம், மச்சராசா, நகா்மன்ற உறுப்பினா்கள் டி.பி.எஸ்.வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT