விருதுநகரில் சனிக்கிழமை மாலை அரை மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை இல்லை. இந்நிலையில் கோடை காலம் தொ டங்கியதால் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு காற்றுடன் பலத்த மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. இதனால், தெருக்கள், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு, வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
பழைய பேருந்து நிலைய பகுதியில் வாருகால் அடைப்பு காரணமாக மழைநீருடன் கழிவுநீா் வெளியேறியதால் பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். நீண்ட நாள்களுக்கு பிறகு வெப்பம் தணியும் வகையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.