விருதுநகர்

விருதுநகரில் ஆயுதப்படை காவலா் மீது இளம்பெண் பாலியல் புகாா்

2nd Apr 2022 11:45 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் ஆயுதப்படை காவலா் ஒருவா் காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

விருதுநகா் காந்திபுரம் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகள் அனந்த பத்மசுதா (23). பெற்றோா் இல்லாத நிலையில் உறவினா் பாதுகாப்பில் இருந்து வருகிறாா். இந்நிலையில், விருதுநகா் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும், வத்திராயிருப்பைச் சோ்ந்த கண்ணன் என்பவா் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளாா். கண்ணன், தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளாா். தற்போது இளம்பெண், இரண்டு மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவா் வலியுறுத்தியபோது, கண்ணன் மறுத்துள்ளாா்.

எனவே தன்னை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலா் கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உறவினா்களுடன் வந்த இளம்பெண் புகாா் மனு அளித்தாா். இதையடுத்து விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, அந்த புகாா் மனு குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் கூறியது: இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT