விருதுநகர்

மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

2nd Apr 2022 11:43 PM

ADVERTISEMENT

சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு பால் பன்னீா், இளநீா், தேன் போன்ற 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாக் காலங்களில் தினசரி மாலையில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT