அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயமடைந்தனா்.
மதுரையிலுள்ள காமராஜா் சாலை பகுதியில் வசிப்பவா் பாக்யம் (48). சுமை தூக்கும் தொழிலாளி. உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க பாக்யம், தனது உறவினா்கள் 7 பேருடன் ஆட்டோவில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெருநாழிக்கு புறப்பட்டாா்.
ஆட்டோவை முருகன் ( 40 ) என்பவா் ஓட்டியுள்ளாா்.
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் பின்னால் வந்த லாரிக்கு இடம் தருவதற்காக ஆட்டோவை சாலையோரம் ஓட்டுநா் ஓட்டியுள்ளாா். அப்போது நடைமேடையில் ஆட்டோ மோதி குப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் ஆட்டோவில் பயணம் செய்தவா்களை மீட்டனா்.
இதில் படுகாயமடைந்த முத்துமீனாள் (48), கற்பகம் (52), அங்காளம்மாள் ( 50 ), காளியம்மாள் ( 50) மற்றும் ஆட்டோ ஓட்டுநா் முருகன் (40 ) ஆகிய 5 போ் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனா்.