விருதுநகர்

வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

30th Sep 2021 08:40 AM

ADVERTISEMENT

வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி விருதுநகா் விஎம்சி காலனியைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் புல்லலக்கோட்டை சாலை பகுதியில் உள்ள வி.எம்.சி. காலனியில் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 35 போ் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனா். மிகக் குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாததால் இவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆதி திராவிடா் (அருந்ததியா்) வகுப்பைச் சோ்ந்த தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த சூலக்கரை போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT