விருதுநகர்

சிவகாசியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகள் பலி

30th Sep 2021 08:39 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் புதன்கிழமை பலியாகினா்.

சிவகாசி அருகே லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முருகன் (40). இவா் தனது மனைவி வெங்கடேஷ்வரி (32), மகள் முத்துலட்சுமி (8), மகன் முனிப்பாண்டி (7) ஆகியோருடன் மொபட்டில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

சித்துராஜபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ஹரீஸ்நாத்(24), ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் அதே சாலையில் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

இந்நிலையில், சிவகாசி டி.எஸ்.பி. அலுவலகம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் முத்துலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முருகன், வெங்கடேஷ்வரி, முனிப்பாண்டி ஆகியோரை பொதுமக்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதனிடையே வெங்கடேஷ்வரி, முனிப்பாண்டி இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல், பலத்த காயமடைந்த ஹரீஸ்நாத் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT