விருதுநகர்

கல்லூரிகளில் இன்றும், நாளையும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

30th Sep 2021 08:41 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வியாழன், வெள்ளி(செப்.30, அக்.1)ஆகிய இரு நாள்கள் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் தகுதியான 16,31,588 பேரில் 9,45,363 பேருக்கு முதல் தவணை, 3,05,228 பேருக்கு இரண்டாவது தவணை என மொத்தம் 12,50,591 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் 59.77 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதற்காக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் விடுபட்ட அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT