விருதுநகர்

ஆண்டாள் கோயில் முன்புறம் தடுப்புக் கட்டைகள் அமைப்பு

30th Sep 2021 08:41 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புறம் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் நான்கு சக்கர வாகனங்களை ஆடிப்பூர கொட்டகையில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கோயிலுக்கு முக்கிய பிரமுகா்கள் வரும்போது வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஆடிப்பூர கொட்டகையில் நிறுத்த முடியாத வகையில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆடிப்பூர கொட்டகையில் இனி நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT