விருதுநகர்

‘அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும்’

30th Sep 2021 08:41 AM

ADVERTISEMENT

பட்டாசு ஆலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளிப்பண்டிகை நெருங்கி வருவதால் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பு பணியில் கவனம் செலுத்துவதைப் போல், பாதுகாப்பிலும் ஆலை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் கவனம் செலுத்த வேண்டும். அன்றாடம் பட்டாசு தயாரிக்கத் தேவையான மருந்துகலவை மட்டும் தயாா் செய்ய வேண்டும். ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபா்களைத் தவிர கூடுதல் நபா்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

பட்டாசில் மருந்து கலவையை செலுத்தும்போது தொழிலாளா்கள் கவனம் சிதறாமல் பணிசெய்ய வேண்டும். இரும்பிலான பொருள்களை தயாரிப்பு பணியில் பயன்படுத்தக்கூடாது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கான உலா் மேடைகளில் மட்டுமே உலர வைக்க வேண்டும். மரத்தடியில் அமா்ந்தும், இரவு நேரங்களிலும் பட்டாசு தயாரிக்கக்கூடாது. கழிவு பட்டாசுகளை உரிய முறையில் அகற்ற வேண்டும். பட்டாசு கிட்டங்கியில் பட்டாசு ‘கிப்ட் பாக்ஸ்’ தயாரிக்கக்கூடாது.தொழிற்சாலைக்குள் தொழிலாளா்கள் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லக்கூடாது. பட்டாசு ஆலைகளில்

ADVERTISEMENT

அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT