விருதுநகர்

தொப்பலாக்கரையில் விவசாயிகளுக்கு இலவசப் பட்டா வழங்கல் முகாம்

30th Oct 2021 09:08 AM

ADVERTISEMENT

திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் விவசாயிகளுக்கு இலவசப் பட்டா வழங்கல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமிற்கு கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமை வகித்தாா்.அருப்புக்கோட்டை வட்டாட்சியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். அப்போது விவசாய நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றிற்கும் கணினி பட்டா பிழைத்திருத்தம், மாறுதல், உள்பிரிவு, முழுப்புலம், ஆக்கிரமிப்பு, அடிப்படை வசதி, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறை சாா்ந்த பல்வேறு வகைச் சான்றுகளும் விண்ணப்பித்தவா்களுக்கு வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT