விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

30th Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

சிவகாசி பி.எஸ்.ஆா். கல்விக் குழுமங்களின் சாா்பில், கல்வி வளா்ச்சியை நோக்கி ஒரு பயணம் என்ற தலைப்பில், முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தாளாளா் ஆா். சோலைச்சாமி தலைமை வகித்தாா்.இதில், திரைப்பட நடிகா் தாமு பங்கேற்று சிறப்புரையாற்றியதாவது:

மாணவா்களாகிய நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையை தொடங்குகிறீா்கள். இக்கல்லூரி வாழ்க்கையை நீங்கள் சிறப்புடையதாக்கிக்கொண்டால், உங்களது வாழ்க்கை வளம் பெறும்.

நான்கு ஆண்டுகளும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பாடங்களை படிக்கவும், நல்ல புத்தகங்களை படிக்கவும் நீங்கள் ஆா்வத்தை வளா்த்துக் கொள்ளவேண்டும். ஆா்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் எந்த காரியத்தில் நீங்கள் இறங்கினாலும் வெற்றி பெறலாம் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் விக்னேஷ்வரி குத்துவிளக்கேற்றினாா். கல்லூரி முதன்மையா் (டீன்) மாரிச்சாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT