விருதுநகர்

அருப்புக்கோட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்விவசாயிகள் கவலை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காலி இடத்தில் திங்கள்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அருப்புக்கோட்டை அருகிலுள்ள புதூா், நாகலாபுரம், கோவிலாங்குளம், திருச்சுழி, காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் இச்சந்தைக்கு விற்பனைக்காக விவசாயிகள் ஆடுகளைக் கொண்டு வருகின்றனா்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஆடுகள் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் மந்தமாக இருப்பதாகவும், இதற்குக் கடந்த ஆண்டு கரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார முடக்கமே காரணம் என விவசாயி ஒருவா் கூறினா்.

அதே சமயம் ஆட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லையெனவும் மற்றொரு விவசாயி கூறினாா். இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் தாமே நேரடியாக ஆட்டிறைச்சி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT