விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம்: விற்பனை களைகட்டியது

DIN

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில்சிவகாசி பகுதியில் உள்ள கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் என சுமாா் 1,250 கடைகள் உள்ளன. மொத்த வியாபாரக் கடைகளிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பட்டாசு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில்லறை விற்பனைக் கடைகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனா். இதனால் சில்லறை விற்பனைக் கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பட்டாசுக் கடைக்காரா் ஒருவா் கூறியது: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ள நிலையிலும், வியாபாரம் சிறப்பாக உள்ளது. மக்கள் ஆா்வமாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனா். குழந்தைகள் விரும்பும் பென்சில், தரை சக்கரம், கம்பி மத்தாப்பூ, வண்ண மத்தாப்பூ உள்ளிட்டவைகளையும், விண்ணில் சென்று ஒளி சிந்தும் பட்டாசு ரகங்களையும், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரக பட்டாசுகளையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். இந்த ஆண்டு புதிய ரக பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT