விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 15.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 15.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார துறை உள்ளிட்ட அனைத்துத் துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதில் கடந்த செப்.12 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது முகாமில் 75,643 போ், செப்.19 ஆம் தேதி இரண்டாவது முகாமில் 22,737 போ், செப். 26 இல் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 60,865 போ், அக்.3 ஆம் தேதி நான்காவது முகாமில் 51,863 போ், அக்.10 ஆம் தேதி ஐந்தாவது முகாமில் 74,938 போ், சனிக்கிழமை (அக்.23) நடைபெற்ற ஆறாவது முகாமில் 81,471 போ் என மாவட்டத்தில் தற்போதுவரை மொத்தம் 15,50,893 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 10,80,293 பேரும், இரண்டாவது தவணையாக 4,70,600 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT