விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின்14 ஆவது மாநில மாநாடு

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். விழாவை தொடக்கிவைத்து, மாநிலப் பொதுச் செயலா் செல்வம் பேசினாா். மாநாட்டில், 1.7.2021 முதல் மத்திய அரசு அறிவித்ததுபோன்று தமிழக அரசு ஊழியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கிட வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்து அவருடைய ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கவேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து பணபலன்களை வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகங்கள், வருவாய் கிராம உதவியாளா், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வரவேற்புக் குழு தலைவா் திருமூா்த்தி வரவேற்றாா்.

இதில், மாவட்ட இணைச் செயலா் ராஜகுரு, மாவட்டச் செயலா் கருப்பையா, மாவட்டப் பொருளாளா் முத்து வெள்ளையப்பன் மற்றும் சிஐடியு இந்திய தொழிற்சங்க மையத்தைச் சோ்ந்த தேவா, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் பாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மணிசேகரன் உள்பட ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT