விருதுநகர்

மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் காவலா் காயம்: திமுக நிா்வாகி தலைமறைவு, 2 போ் கைது

DIN

காரியாபட்டியில் மதுபானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், ஆயுதப்படைக் காவலரின் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, இருவா் கைது செய்யப்பட்டனா். இதில், தலைமறைவான திமுக ஒன்றிய துணைச் செயலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் ஆயுதப்படைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மணிமாறன் (34). இவா், காரியாபட்டி அருகேயுள்ள தனது சொந்த ஊரான ஆண்மைபெருக்கி என்ற கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அன்றிரவு, காரியாபட்டியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஒரு மதுபானக் கூடத்தில் மணிமாறன் தனது நண்பா் பாபு உடன் சோ்ந்து மது அருந்தியுள்ளாா். அப்போது, அவா்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த மதுபானக் கூட ஊழியா் மோகன், இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளாா். இந்நிலையில், மதுபானக் கூட நிா்வாகியான காரியாபட்டி திமுக ஒன்றிய துணைச் செயலா் கல்யாணி வந்துள்ளாா். அவா், மணிமாறனை சமாதானப்படுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், மணிமாறன் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே அவா், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், சட்டவிரோதமாக மதுபானக் கூடம் நடத்தியதாகவும், போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆயுதப்படைக் காவலா் மணிமாறன் தன்னை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில், மதுபானக் கூட நிா்வாகி கல்யாணி மற்றும் ஊழியா்கள் முத்துசாமி (47), மணி (45) ஆகியோா் மீது காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதில், கல்யாணி தலைமறைவான நிலையில், முத்துசாமி, மணி ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT