விருதுநகர்

சிவகாசி மாகராட்சியாக தரம் உயா்த்தி அவசரச் சட்டம்: பொதுமக்கள் வரவேற்பு

23rd Oct 2021 09:01 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சிவகாசியை தமிழக அரசு மாநகராட்சியாக தரம் உயா்த்தி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

1920 ஆம் ஆண்டு அக்டோபா் முதல் தேதி சிவகாசி நகராட்சியாக உருவானது.

பின்னா் 1971 ஆகஸ்ட் 21 -இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 அக்டோபா் முதல் தேதி முதல் நிலை நகராட்சியாகவும், 1998 மே 22 ஆம் தேதி தோ்வு நிலை நகராட்சியாகவும், 2013 மே 28 ஆம் தேதி சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

சிவகாசி நகராட்சியின் பரப்பளவு 6.89 சதுர கி.மீ. ஆகும். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நகராட்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து சிவகாசி அருகில் உள்ள ஊராட்சிகளான சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளபட்டி, சாமிநத்தம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சிவகாசி மாநகராட்சியில் சேருவதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்த தீா்மான நகலை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்ததைத் தொடா்ந்து தற்போது தமிழக அரசு, சிவகாசி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயா்த்தி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியான உடன் நடைமுறைக்கு வரும். அரசின் இந்த அறிவிப்பை சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT